பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் சீரமைப்பு... நிரந்தரமாக குழாய் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை...

 

நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நேற்று காலை முதல் மதியம் வரை குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வந்த நிலையிலும் கடல் சீற்றம் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று இரவு தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு மேலும் கச்சா எண்ணெய் பரவாமல் தடுத்த நிலையில்,  குழாய் உடைப்பினை பழுது நீக்கம் செய்ய இரவிலும் தொடர்ந்ததால் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தரின் பெயரில் அங்கு பகல் போல் காட்சி அளிக்கும் அளவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கையாக அனைத்து துறையினரும் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாயில் உடைப்பு கடலில் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கணிக்க இந்திய கடலோர காவல் குழுமத்தின் சார்பாக இரண்டு கப்பல்கள் மற்றும் டோர்னியோ விமானம் மூலம் ஆய்வு இதனைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை சார்பாக ஆயில் பரவி உள்ள இடங்களில் அதன் தன்மையை செயலிழைக்கும் வகையில் Oil Spill Dispersant (OSD) ஆயில் கசிவு ஏற்பட்ட கடந்த இடத்தில் இரண்டு, 50 லிட்டர் கேன்களில் கெமிக்கலை  பட்டினச்சேரி கிராமத்திற்கு கொண்டு வந்துள்ள அவர்கள் கடலில் எண்ணெய் படர்ந்துள்ள இடங்களில் தெளிக்க  உள்ளனர். இதனால் கடல் மற்றும் நிலம் பகுதிகளில் மனிதர்கள் மட்டுமல்லாமல் உயிரினங்களும் பாதிக்காது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் மூலமாக கடற்கரையில் பள்ளம் தோண்டப்பட்டு  கச்சா எண்ணெய் கலந்த கடல் நீர் அதில் சேகரம் செய்யப்பட்டு கச்சா எண்ணெய்  கடலில் இருந்து அப்புறப்படுத்தும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

 இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில்  உடைப்பினை  ஊழியர்கள் சரிசெய்து உள்ள நிலையில் கச்சா எண்ணைய் குழாயை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்‌.இந்நிலையில் மீனவர்கள்  போராட்டத்தில்  ஏற்பட்டால்  அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக  தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்,நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன், மயிலாடுதுறை  மாவட்டம் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மதியம் 12 மணி அளவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சென்னையில் இருந்து இரண்டு அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments