திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திருவாரூர் கடைவீதி மற்றும் விஜயபுரம் மார்க்கெட் தெரு பகுதி என்பது உள்ளது.இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒரு பகுதியாகும்.பொதுமக்கள் கூட்டம் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் இப்பகுதியில் எப்போதும் நிறைந்திருக்கும்.மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லரை வியாபரிகள் பொருட்களை வாங்குவதற்கு இந்த பகுதிக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் இந்த கடைத்தெரு பகுதியில் ஈசல் போன்ற பூச்சி இம் ஒன்று படையெடுக்க தொடங்கியுள்ளது.குறிப்பாக இந்த பூச்சி படையெடுப்பின் காரணமாக கடைத் தெருவில் உள்ள கடைகளில் உள்ள மின் விளக்குகளை சுற்றி மொய்க்க தொடங்கியுள்ளது. இந்த பூச்சியிடம் இருந்த துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.இதனால் செய்வதரியாது திகைத்த வியாபாரிகள் கடைகளை பூட்டி மின்விளக்குகளை அனைத்து கடை வாசலில் காத்திருக்கக்கூடிய நிலைமை என்பது ஏற்பட்டது.
மேலும் அந்த சாலையில் கடை வைத்திருந்த வியாபாரிகளும் சாலை வழியாக பயணித்த பொதுமக்களும் இந்த திடீர் பூச்சி வருகையின் காரணமாக தலையில முக்காடு போட்டபடி சாலையை கடந்து சென்றனர்.வியாபாரிகள் இதனை வீடியோவாக எடுத்து புதிதாக பூச்சி வடிவில் ஒரு எறும்பு இனம் உள் நுழைந்து விட்டதாகவும் இதனால் தங்கள் வியாபாரம் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டதாகவும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


0 Comments