தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் JSW சார்பில் பல்வேறு இடங்களில் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விளாத்திகுளம் அருகே கே. குமரெட்டையாபுரம் கிராமத்தில் காற்றாலை மின் விசிறி அமைக்கும் பணிக்காக குடியிருப்பு பகுதிகள் மற்றும் கோவில் வழியாக உயர் அழுத்த மின்கம்பங்கள் உயர் மின்னழுத்த கம்பிகள் கொண்டு செல்வதற்காக மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.. இப்பணியை அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தடுத்து நிறுத்தி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் இது தொடர்பாக குடியிருப்புப் பகுதிகள் வழியாக உயர் மின்னழுத்த கம்பிகள் கொண்டு செல்லக்கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை இது குறித்து தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
இதுகுறித்து கே.குமரெட்டையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராமலிங்கம் கூறுகையில் : எங்களது கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் பொதுமக்களுக்கு இடையூறாகவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உயிர் அழுத்த மின்கம்பங்களை அமைத்து வருகின்றனர். இந்த மின்கம்பம் அமைக்கும் பணியால் சாலை உறுக்குலைந்துவிட்டது. பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது மேலும் உயர்ழுத்த மின்கம்பத்தால் மின் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே உயர் அழுத்த மின் கம்பத்தை வேறு இடத்திற்கு அமைக்க வேண்டும் என்றார்.

0 Comments