விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியைச் சார்ந்த தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட மது மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு பெறுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 80க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த பேரணி கல்லூரி முன்பு தொடங்கி கல்லூரி சாலை ராமமூர்த்தி சாலை வாடியன் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வழிகளாகச் சென்று மதுரை சாலையில் உள்ள கே வி எஸ் நடுநிலைப் பள்ளியில் முடிவடைந்தது.
இந்த பேரணியை கல்லூரியின் பரிபாலன் சபை தலைவர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார் பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து கோஷங்கள் எழுப்பியவாறும் பதாகைகள் உடன் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


0 Comments