புஞ்சைபுளியம்பட்டி அருகே புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நல்லூர் எஸ் .ஆர் .சி மெமோரியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்  நடத்தப்பட்டது .இதில் மாணவ மாணவியர்களுக்கு புகையிலையினால் ஏற்படும்  தீங்குகள் பற்றியும்  அதன் விளைவுகள் பற்றியும் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அவர்களின் அலுவலகத்தைச் சேர்ந்த மாவட்ட புகையிலை தடுப்பு நலஆலோசகர் கலைச்செல்வி விளக்கம் அளித்தார். சமூகசேவகர்  சங்கீதா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரம், சுகாதார ஆய்வாளர் ஆனந்த்ராஜ் மற்றும்  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். இறுதியில் அனைவராலும் போதை மற்றும் புகையிலை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments