விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை

விருதுநகர் அருகே வி.ராமலிங்கா புரத்தில் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 

இந்த பட்டாசு ஆலை சென்னை உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 40க்கு மேற்பட்ட அறைகள் உள்ள நிலையில் 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையில் தினமும் உற்பத்தி செய்த பேன்சி ரக பட்டாசுகளை சேமிப்பு அறையில் வைப்பது வழக்கமாகும். 

இந்த நிலையில் இன்று காலை பேன்சி ரக பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த அறையில் அதிக வெப்பம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த அறை முற்றிலும் சேதமடைந்தது. 

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்த போது பட்டாசு ஆலைக்கு தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Post a Comment

0 Comments