சங்கரன்கோவிலில் மல்லிகைப் பூவின் வரத்து அதிகரித்து இருந்தாலும் பூவின் விலை குறைவினால் விவசாயிகள் வேதனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புளியம்பட்டி,மலையான்குளம், ஆலங்குளம்,திருவேங்கடம் ,குருவிகுளம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை பூ விளைச்சல் செய்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மலர் சந்தையில் விவசாயிகள் மல்லிகை இப்போ வியாபாரிகளிடம் கொடுக்கும் பொழுது வியாபாரிகள் மல்லிகைப் பூ ஒரு எடை 130 ரூபாய்க்கு வாங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் முந்தைய மாதம் ஒரு எடை 400 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிய நிலையில் தற்போது 150 ரூபாய்க்கு வாங்குவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.



Post a Comment

0 Comments