ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இன்று முதல் ஜூன் 12 வரை 100நாட்களுக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல். ஏ. தண்ணீரை திறந்து வைத்தார்.
உடன் உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் தமிழ்பரத்,பாசன விவசாயிகள் சங்க தலைவர் நாகராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி, சரவணன் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கவின் பிரசாத் , ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments