தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலவன்குளம் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் ரெங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள் என்பவர் சடலமாக கிடந்ததை தொடர்ந்து சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் உடலை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துக் கொண்ட தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில் மாரியம்மாளுக்கும் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்காலாடி ஆகிய இருவருக்கும் தொடர்பு உள்ளதாக அறிந்த காவல்துறையினர் முத்துகாலடியை பிடித்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கணவனை இழந்த மாரியம்மாளுக்கும் மனைவியை இழந்த முத்துக்காலடி ஆகிய இருவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்திப்பது வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை எடுத்து முத்துக்காலடி மாரியம்மாள் நடத்தையின் மீது சந்தேகப்பட்டதின் காரணமாக மாரியம்மாமாளை தனியாக தோட்டத்திற்கு வரவழைத்து தோட்டத்தில் இருந்த கயிற்றால் மாரியம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் அவனது நண்பரான சுப்பையா உதவியுடன் இரவு நேரத்தில் மாரியம்மாளின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்று இருவரும் ரயில்வே தண்டவாளம் அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் வீசி சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
மேலும் கள்ளக்காதலிலும் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு பெண் ஒருவரை கொலை செய்து காட்டுப் பகுதியில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...



0 Comments