ரமலான் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியினை கூடுதலாக வழங்க உத்தரவிட்ட தமிழக அரசிற்க்கு தென்னிந்திய தர்காக்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் நன்றி

உலகப்புகழ் பெற்ற, மத நல்லிணக்கித்திற்க்கு சான்றாக விளங்கும் நாகூர் தர்காவின் பரம்பரை ஆதீனமும் தென்னிந்திய தர்காக்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் தலைவருமான "செய்யது முஹம்மது கலிபா சாஹிப் தமிழக அரசிற்க்கு - ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை தமிழக அரசு கடந்த வருடத்தைவிட அதிகமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார், மேலும் இஸ்லாமிய பத்திரிக்கையாளர் பேரவை உள்ளிட்ம பிற அமைப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி இந்த வருடம் இஸ்லாமிய மக்களுக்காக கூடுதல் அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வருடா வருடம் தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் தமிழக அரசிற்க்கு இஸ்லாமிய மக்கள் மனதார நன்றி செலுத்தி வருகின்றனர். 

கடந்த ஆண்டு 6000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. இந்த வருடம் கூடுதலாக 500 டன் மெட்ரிக் டன் அதிகரிக்கப்பட்டு 6500 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸடாலின் அறிவித்தார். தனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழக அரசிற்க்கு செய்யது முஹம்மது கலிபா சாஹிப் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் உறுதுணையாக செயல்பட்ட தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் அவர்களுக்கும், மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.  மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சி நிர்வாகம் நோன்பு பிறைக்கு முன்பாகவே தமிழக அரசின் விலையில்லா அரிசியினை அந்தந்த உரிய பள்ளிவாசலுக்கும் உரிய தர்காவிற்க்கும் தைக்காலுக்கும் சேர்த்திட வேண்டும், இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்படும் ஆகவே உரிய நேரத்தில் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments