சத்தியமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி சார்பில் இண்டியம்பாளையத்தில் நாட்டு நலப்பணி திட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் துவக்க விழா  இண்டியம்பாளையம் கிராம ஊராட்சியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன்  தலைமையில் நாட்டு நல பணித்திட்ட அலுவலர்  ராமச்சந்திரன் அனைவரையும்  வரவேற்றார். விழாவில் கல்லூரி முதல்வர், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்  அண்ணாதுரை, இண்டியம்பாளையம் ஊராட்சி  தலைவர்  செந்தில் ஆகியோர் பேசினர் .  விழாவில் ஒய்ஸ்மென் கிளப் நிர்வாகிகள்  நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களுக்கு கையுறை, தொப்பி மற்றும் ஒளிரும் பட்டைகள் போன்றவற்றை பரிசாக வழங்கினர். இந்த விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments