ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம் ஆலத்துகோம்பை பகுதியில் தேசிய 100நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும் , அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி எம்.எல். ஏ. குறைகளை கேட்டறிந்தார்கள். பொதுமக்கள் விடுத்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார். உடன் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.என்.சிவராஜ், சதுமுகை ஊராட்சி மன்ற துணை தலைவர் லோகநாதன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் , பொதுமக்கள் நிகழ்வின்போது உடனிருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments