தேனி மாவட்டம் பெரியகுளம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக 24.2.23 ம் தேதி பெரியகுளம் தெற்கு அக்ஹாரகாரத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் காலமானார் .அதனை யடுத்து தினந்தோறும் ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அங்கு வைக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் அவர்களது தாயார் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தலைவர்கள் ,நிர்வாகிகள் நேரில் வருகை புரிந்து ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் .இந்நிலையில் இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரில் வருகை புரிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் தாயார் படத்திற்கு மலர் தூவி ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் .இதில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் பாலு ,மாவட்டத் தலைவர் பி .சி. பாண்டியன் ,பாஜக தேனி மாவட்ட ஊராட்சிகள் குழு துணை தலைவர் ராஜபாண்டியன்,பாஜக பெரியகுளம் நகர தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் .

0 Comments