24 விரல்களுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தை....
தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் கொருட்லா அரசு மருத்துவமனையில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. நிஜாமாபாத்தில் உள்ள ஏர்காட்டைச் சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு திங்கள்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மொத்தமாக 24 விரல்களுடன் பிறந்துள்ளது. குழந்தைக்கு இரண்டு கால்கல் மற்றும் இரு கைகளிலும் ஆறு விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருப்பதை மருத்துவர்கள் கவனித்தனர். இந்த அதிசய குழந்தையை அங்கிருந்த மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
No comments