உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அலறவிட்ட முகநூல் பதிவு - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 18, 2023

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அலறவிட்ட முகநூல் பதிவு

 


உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பாஜக மூத்த தலைவர் யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வேன் என்று ஒரு நபர் பேஸ்புக்கில் மிரட்டும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை தொடங்கினர். விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமென் ராஜா என்பர் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சுட்டுக்கொல்வேன் என்று சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டது தெரியவந்துள்ளது.


இதனை தொடர்ந்து அமென் ராஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு உள்ளாரா? என்பது குறித்து ஜார்க்கண்ட் போலீஸ் உதவியுடன் உ.பி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment