நம்பியூர் அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் பசுமை சித்தர் தரிசனம்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஸ்ரீ ஐய்யனார் திருக்கோயிலில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த பசுமை சித்தர் தரிசனம் செய்து உலக இயற்கை நலம் வேண்டியும் அனைத்து உயிரினும் சிறப்புற்று வாழவும் வழிபாடு செய்தார்.
நம்பியூர் அருகே உள்ள செட்டியம்பதி குளக்கரையின் பகுதியில் ஸ்ரீ ஐய்யனார் கோவில் பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது அக்கோயிலை மறுசீரமைத்து திருப்பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
பழங்கால முறைப்படி கோயில் சிற்ப வேலைப்பாடுகள் முற்றிலும் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.ஸ்ரீ ஐய்யனார் திருக்கோயிலில் சிறப்பு சாமி தரிசனமாக பிரபல திரைப்பட நடிகர் கிங் காங் கலந்து கொண்டார்.
மேலும் அதைத் தொடர்ந்து நேற்று நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சேர்ந்த பசுமை சித்தர் ஸ்ரீ ஐய்யனார் கோவிலில் தரிசனம் செய்தார் அப்போது கூறிய அவர் திருக்கோயிலில் சித்தர்கள், நாகராஜர் ,கன்னிமார் போன்ற தெய்வங்கள் குடிகொண்டுள்ளதாகும் அதற்கான ஓவியங்களை கண்முன்பே வரைந்து காட்டினார்.
இத்திருக்கோயிலில் சித்தர்கள் குடிகொண்டு வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ சிங்காரவேலவன் சிவசக்தி அருள்வாக்கு சித்தர் குருபீடம் உலக மக்கள் அறக்கட்டளை சிவன் ஞான சிவயோகி மீனாட்சி அம்மா மாதாஜி அவர்கள் கூறுகையில் வருகின்ற பெளர்ணமி பங்குனி உத்திரத்தன்று ஏழு கலசம் கொண்டு தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் அனைவருக்கும் கேட்ட வரங்களை ஐய்யனார் அள்ளித்தருவார் என்று கூறினார். மேலும் சிறப்பு தரிசனத்தில் அகஸ்தியா தற்காப்பு கலை பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் குணசேகரன் கலந்து கொண்டார்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாலைகள் அணிவித்து கௌரவம் செய்யப்பட்டு தாம்பூல தட்டுடன் ஸ்ரீ ஐய்யனாரின் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறப்பு தரிசன விழா ஏற்பாட்டினை ஸ்ரீ ஐய்யனார் திருக்கோயில் தர்மகர்த்தா லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments