• Breaking News

    நாகையில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் மற்றும் புதிய மாணவர்கள் இணைப்பு நிகழ்வு


    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொட்டாரக்குடியில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு  திராவிடர் கழக திருமருகல் ஒன்றிய செயலாளர் ரமேஷ்  தலைமையிலும் மாவட்ட இளைஞரணி  தலைவர் ராஜ்மோகன், மாவட்ட மாணவரணி தலைவர் பாக்கியராஜ்,  மாவட்ட இளைஞரணி து.தலைவர் அறிவுமணி, மாவட்ட மாணவரணி செயலாளர் குட்டிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திராவிட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர் மு.இளமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவது. வரும் ஏப்ரல் 14ம் தேதி ஜெகதாபட்டினத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற உள்ள மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது. ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் நாகை மாவட்டம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து  புதிய மாணவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பெரியார்தாசன், அருண்குமார், கோகுல், ஜனா, தினேஷ், விஜயராகவன், பிரியதர்ஷன், கீர்த்தி வாசன், சந்தோஷ், மணிகண்டன், ராஜேஷ் ஆகிய திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டம் மற்றும் புதிய மாணவர்கள் இணையும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

    No comments