பெரியகுளம் சோத்துப்பாறை அணையை தூர்வார வேண்டும்; எம்எல்ஏ சரவணகுமார் கோரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை 2001 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து வந்த அதிமுக அரசு அணையை தூர்வாரமுன்வராக தான் தொடர்ந்து மணல்கள் கற்கள் மரங்கள் கழிவுகள் ஒன்று சேர்ந்து குடிநீர் பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளதாகவும் ஆகவே பெரியகுளம் சோத்துப்பாறை அணையை தூர் வார வேண்டும் என்றும்,மஞ்சளாறு அணையில் இருந்து அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு விவசாய நிலங்களுக்கும், பயன் பெரும் வகையில் வாய்க்கால்கள் அமைத்து தர வேண்டும் எனவும்,பெரியகுளம் வராத நதியில் வெள்ளப்பெருக்கு காலங்களில் அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கும் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவில் இருந்து பங்களாப்பட்டி வரை ஆற்றங்கரை ஓரம் தடுத்து தர வேண்டும் எனவும்,நந்தியாபுரம் கண்மாயிலிருந்து தாமரைக் குளம் பேரூராட்சி வைகை அணைச்சாலை வரை பாலம் அமைத்து தர வேண்டும் எனவும்,குளங்கள் கண்மாய்களை சீரமைத்து தர வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
No comments