புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மீமிசல் சாலையில் வசிப்பவர் சந்திரசேகரன். இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இந்நிலையில் இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து, சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில், ஆவுடையார்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments