டிக் டாக் மூலம் புகழ்பெற்ற ஜி.பி. முத்து, தற்போது சின்னத்திரை மதல் வெள்ளித்திரை வரை அனைத்திலும் பிரபலமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ஜி.பி. முத்து திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியுடன் என்ன ஆச்சு தலைவரே? என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

0 Comments