ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் அ. பண்ணாரி. எம் எல் ஏ., தலைமை தாங்கினார். மேலும் இக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் எம் எல் ஏ., கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் நிரப்புவது குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ் , சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன் , சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என். எம். எஸ். நாச்சிமுத்து, சத்தி நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம் , பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி , பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிச்சாமி, புஞ்சை புளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே. மூர்த்தி, அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் பி.என்.தேவமுத்து , கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர் நடராஜ், மகளிரணி மாவட்ட செயலாளர் ஏ.டி. சரஸ்வதி, மகளிர் அணி துணைச் செயலாளர் வி.பி.தமிழ்ச்செல்வி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கொத்துக்காடு வி.பி.பெரியசாமி , கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் , மற்றும் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment