விஜயமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ தர்மராஜா திரளபதி அம்மன் கோயில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது
ஈரோடு மாவட்டம்,விஜயமங்கலம் மேற்கூர்ரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மராஜா திரளபதி அம்மன் கோயில் கட்டுமான பணிக்கு முதல் பூஜையாக பூமி பூஜை போடப்பட்டு பாலக்கால் பூஜையும் நடைபெற்றது இதில் ஊர் தலைவர் சீனிவாசன் அவர்களும் ஸ்ரீ தர்மராஜா திரளபதி அம்மன் ட்ரஸ்ட் தலைவர் ரங்கையன் உபதலைவர் பார்த்திபன் ரஜினிகாந்த் செயலாளர் கதிர்வேல் இணைச்செயலாளர் வடிவேல் பொருளாளர் பூர்ண சந்திரன் துணைச் செயலாளர் சரவணன்அவிநாசி விஸ்வகர்மா சிற்பக் கலைக்கூட ஸ்தபதி முத்து,விக்னேஷ், விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக நம்பியூர்ஸ்ரீ ஐய்யனார் கோவில் தர்மகத்தா லோகு அவர்கள் கலந்து கொண்டார்.
மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவில் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments