கோவில்பட்டியில் மாவீரன் பகத்சிங் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம்- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Sunday, April 2, 2023

கோவில்பட்டியில் மாவீரன் பகத்சிங் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம்- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்பு


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து மாவீரன் பகத்சிங் 92 வது நினைவு நாளை முன்னிட்டு பகத்சிங் ரத்ததான கழகம் மற்றும் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பகத்சிங்கின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார் முகாமில் 50க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் ரத்த தானம் செய்தனர்.

No comments:

Post a Comment