பீர் பாட்டில் வெடித்ததில் பார்வை இழந்த டாஸ்மாக் பணியாளர் - MAKKAL NERAM

Breaking

Sunday, April 16, 2023

பீர் பாட்டில் வெடித்ததில் பார்வை இழந்த டாஸ்மாக் பணியாளர்

 



கோவை மாவட்டம் காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806-ல் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் செந்தில்குமார் . இந்நிலையில் இவர் நேற்று எப்பொழுதும் போல பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்.அப்போது திடீரென்று பீர் பாட்டில் வெடித்தது. இதில், அவரது இடது கண்ணில் உடைந்த பாட்டில் துண்டு, பட்டு, கருவிழி பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில், உள்ள, ஐ பவுண்டேசனில் சிகிச்சை அனுமதித்தனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment