நாகையில் மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் இணையும் விழா
மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 1 கோடி உறுப்பினர்கள் திமுக கழகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட கழக செயலாளருமான என்.கௌதமன் தலைமையில் நாகை நகர கழக செயலாளரும் நகர மன்ற தலைவருமான இரா.மாரிமுத்து முன்னிலையில் நாகை நகரம் 34-வது வார்டில் அ.தி.மு.க வார்டு செயலாளர் சிங்காரவேல் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இல.மேகநாதன் மாவட்ட பொருளாளர் மு.லோகநாதன் பொதுகுழு உறுப்பினர் பாண்டியன் மாவட்ட பிரதிநி ரமணி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும் நகர மன்ற உறுப்பினருமான ஆர்.ஏ.டி.அண்ணாதுரை நகர கழக நிர்வாகிகள் .ஆர்.குலோத்துங்கன் சிவா வார்டு கழக செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments