• Breaking News

    மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்

     


    16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 22-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்வுள்ளது.

    மேலும் இன்று மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  வயிற்றுப் வலி காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அணியை சூரியகுமார் யாதவ் வழிநடத்துகிறார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி (பிளேயிங் லெவன்):

    இஷான் கிஷன்(w), கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(c), டிம் டேவிட், நேஹால் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்):

    ரஹ்மானுல்லா குர்பாஸ்(வ), வெங்கடேஷ் ஐயர், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(சி), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி

    No comments