அமைச்சர் செந்தில்பாலாஜி 2016ம் ஆண்டில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் - MAKKAL NERAM

Breaking

Friday, May 19, 2023

அமைச்சர் செந்தில்பாலாஜி 2016ம் ஆண்டில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்


அமைச்சர் செந்தில்பாலாஜி 2016ம் ஆண்டில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு, எதிராக கீதா என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, நடைபெற்ற அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். இருப்பினும், செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிராக கீதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கழகத்தின் கீதா என்பவர் போட்டியிட்டிருந்தார்.

செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக கீதா என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதுமட்டுமில்லாமல், கீதாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கீதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.இந்த நிலையில், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் சேலத்தில் பாலாஜி வெற்றி பெற்றதற்கு, எதிராக கீதா என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

No comments:

Post a Comment