கள்ளச்சாராயம் அருந்திய 3 பேர் பலி - MAKKAL NERAM

Breaking

Sunday, May 14, 2023

கள்ளச்சாராயம் அருந்திய 3 பேர் பலி

 


விழுப்புரம் மாவட்டம் மரக்கணத்தை அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 100 கணக்கான போலீசார் எக்கியர்குப்பம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், மேலும் சிலர் கள்ளச்சாராயம் அருந்தி இருந்தது தெரியவந்தது. அவர்களையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். பின்னர் கள்ளச்சாராயம் எவ்வாறு யார் மூலம் விற்பனை என்ற விசாரணையை தொடங்கிய நிலையில் மரக்கணத்தை சேர்ந்த அமரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 16 பேரில் சங்கர் , சுரேஷ் , தரணிவேல் எனும் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment