ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுகள் கலப்பதை ஆய்வு மேற்கொள்வதற்காக பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம் எல் ஏ., நேரில் பவானிசாகர் அணை பகுதிகளில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அணை நீரில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதாலும் குடிநீரில் ரசாயனம் கலந்த நீர் சென்று வருவதால் அதை தடுக்க உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு ரசாயன களிவை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வின் போது அரசு அதிகாரிகள் , அஇஅதிமுக நிர்வாகிகள் பவானிசாகர் பேரூர் கழக செயலாளர் கே.செல்வம் , பவானிசாகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.எஸ்.பழனிச்சாமி , பவானிசாகர் சரவணன் , வழக்கறிஞர் கே.எஸ்.வெற்றிவேல் ,குமரேசன் , சத்தி நகர அம்மா பேரவை இணை செயலாளரும், 25 வது வார்டு கழக செயலாளர் எஸ்.டி.காமேஷ் , பூஜித் மற்றும் பலர் ஆய்வின் போது உடனிருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
Sunday, May 14, 2023
Home
Makkal Neram
ஈரோடு மாவட்டம்
பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுகள் கலப்பதை ஆய்வு மேற்கொண்டார் அ.பண்ணாரி எம்.எல்.ஏ
பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுகள் கலப்பதை ஆய்வு மேற்கொண்டார் அ.பண்ணாரி எம்.எல்.ஏ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment