மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 நாட்களாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை கலவரமாக தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தும் வன்முறை சம்பவங்கள் மீண்டும் மீண்டும் தொடர்கின்றன.
நேற்று, கங்போக்பி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், தலைநகர் இம்பாலில் பாஜக அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. உடனே அங்கு வந்த பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.இதுவரையில் மணிப்பூர் கலவரத்தில் 133பேர் உயிரிழந்ததாகவும், 3000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ற்ன. மேலும், பலர் தங்கள் சொந்த வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment