கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கைது - MAKKAL NERAM

Breaking

Monday, June 26, 2023

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கைது

 


மதுரை மாவட்டம் கருவனூரில் ஊர் கோவில் திருவிழாவின் போது யாருக்கு முதல் மரியாதை என தகராறு ஏற்பட்டு மோதலாக மாறி அது தற்போது கைது நடவடிக்கை வரை தொடர்ந்துள்ளது.


அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக நிர்வாகி வேல்முருகன் என இரு தரப்பு மோதலில் பொன்னம்பலம் வீடு சேதப்படுத்தப்பட்டதோடு, கார் எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.



இந்நிலையில்,  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் , திமுக கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகியோர் இரு தரப்பில் இருந்தும் காவல் துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment