ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியவில்லை: திமுக எம்பி கனிமொழி விமர்சனம் - MAKKAL NERAM

Breaking

Friday, June 30, 2023

ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியவில்லை: திமுக எம்பி கனிமொழி விமர்சனம்

 


அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.


இந்த நிலையில் ஆளுநரின் செயல்பாடு குறித்து, கனிமொழி எம்.பி அவர்கள், ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது. அரசியலமைப்புக்கும் ஒரு மாநிலத்தின் இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம்.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்ற குரலையும்,  நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு என்ற கலைஞரின் உரையையும் மேற்கோள்காட்டி ட்வீட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment