கரூர் மாவட்ட ஐய்யப்ப சேவா சங்கம் மற்றும் ஐயப்பா சேவா பாரத் சார்பாக உலக நன்மை வேண்டி 108 குத்துவிளக்கு பூஜை மற்றும் ஹோமங்கள் நடைபெற்றது. இப் பூஜையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பூஜைகள் செய்யப்பட்டது மேலும் இப்போது 108 சகஸ்ர நாமங்கள் உச்சரிக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மகா தீபாரதனை முடிந்த பின்பு கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு பூஜைகள் வைக்கப்பட்ட மாங்கல்ய பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கரூர் மோகன் ராஜ்
No comments:
Post a Comment