நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெண்கள் ஏராளமான வளையல்களை கோவில் நிர்வாகத்திடம் காணிக்கையாக வழங்கினர். அதனை கோயில் நிர்வாகம் சார்பாக ஒரு லட்சத்து 25.000 வளையல்கள் மாலையாக அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவில்களில் உள்ள விநாயகர், முருகர், மற்றும் பரிகார தெய்வங்கள் என அனைத்து தெய்வங்களுக்கும் வளையல்கள் மாலையாக கோர்த்து அணிவித்திருந்தனர். அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாரணை காட்டப்பட்டது.
முன்னதாக இந்த வளையல் மாலை அலங்கரிப்பு பணியில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வளையல்கள் கோர்த்தனர்.
இந்த வளையல் அலங்காரத்தை பார்ப்பதால் திருமண தோஷம் நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும், மற்றும் கல்வி தொழில் மேன்மை உள்ளிட்ட நன்மைகள் ஏற்படும் என பூசாரிகள் தெரிவித்தனர்.
இந்த சிறப்பு வளையல் அலங்காரத்தை காண ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், கூல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரிகள் பாலீஸ்வரன் பூசாரி, செல்வம் பூசாரி, மணி பூசாரி, விஜி பூசாரி, கணேசன், ராஜா,மதி, யுவராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment