குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகாளியம்மன் 19ஆம் ஆண்டு திருநடன உற்சவ திருவிழா நிறைவு பெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, July 28, 2023

குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகாளியம்மன் 19ஆம் ஆண்டு திருநடன உற்சவ திருவிழா நிறைவு பெற்றது


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் அருள்மிகு ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 19 ஆம் ஆண்டு திருநடன உற்சவ திருவிழா கடந்த ஐந்தாம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல்,சக்தி கரகம் நடைபெற்று கடந்த 19 ஆம் தேதி அன்று கோவிலில் இருந்து காளி திருநடனத்துடன் புறப்பட்டு அனைத்து வீதிகளுக்கும் சென்றது பின்னர் வீடுகள் தோறும் பொதுமக்கள் மாலை அணிவித்தும் மாவிளக்கு தீபமிட்டு தீபாராதனை எடுத்தும் வழிபாடு செய்தனர் தொடர்ந்து நேற்று ஒன்பதாம் நாள் பந்தல் காட்சியுடன் ராஜகாளியம்மன் திருநடன உற்சவம் நிறைவு பெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை குத்தாலம் சின்ன செங்குந்தர் தெரு மற்றும் பெரிய செங்குந்தர் தெருவாசிகள் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment