கரூர் மாவட்டத்தில் வல்லகுளம், வேப்பங்குடி திருமலைரெட்டிபட்டி, மஞ்சாநாயக்கன்பட்டி ஆகிய நான்கு இடங்களில் பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்
தொடர்ந்து தோரணக்கல்பட்டியில் தற்போது நடைபெற்று வரும் 50000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால்பண்ணை அமைக்கப்பட்டு வரும் பணியை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
பால் உற்பத்தி பெருக்க விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது அரசு.
கரூர் மாவட்டத்தில் மாடு வளர்ப்பதற்கு நல்ல சூழல் அமைந்துள்ளது. ரூ. 1 கோடி 04 லட்சம் மதிப்பில் பால் குளிரூட்டு நிலையம் வைக்கம்பட்டுள்ளது. அதேபோல ரூ.3.50 கோடி மதிப்பில் பால் பண்ணை அமைக்கப்பட உள்ளதாகவும்.
மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்க கடந்த மாதம் 5000 கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றும்.
ஆவின் பால் விலை உயர்வு என்பது தவறான தகவல்.
தரமான பால், கலப்படம் இல்லாமல் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் பொருட்கள் நல்ல தரம், விலையும் நியாயமாக உள்ளது.
முறையான தரச்சான்று இல்லாமல் விற்கப்படும் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
கரூர் மோகன்ராஜ்
No comments