• Breaking News

    அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணியர் நிழற்குடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது


    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி ,  தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம் , பெருமுகை ஊராட்சி , தண்ணீர் பந்தல் புதூர், வரப்பள்ளம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணியர் நிழற்குடை அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில்  டி.என்.பாளையம் ஒன்றிய கழக செயலாளர்  எம்.சிவபாலன் , ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  நவமணி கந்தசாமி , மாவட்ட  மாணவர் அணி துணை அமைப்பாளர் சஞ்சீவி முருகேஷ் , தகவல் தொழில் பணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், டி.என்.பாளையம் ஒன்றிய பொருளாளர் கார்த்திகேயன் , ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ்  , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கஸ்தூரி திருமுருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments