எரிந்து கொண்டிருந்த பிணத்தை தின்ற இருவர் கைது.... பகீர் பின்னணி.... - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 15, 2023

எரிந்து கொண்டிருந்த பிணத்தை தின்ற இருவர் கைது.... பகீர் பின்னணி....

 

கோப்பு படம்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுடுகாட்டில் இரண்டு நபர்கள் எரிந்து கொண்டிருந்த சடலத்தை உட்கொண்டதற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மதுஸ்மிதா சிங் எனும் 30வயது பெண் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.


இதனை அடுத்து கடந்த புதன்கிழமை அன்று அவரது உடல் மயூர்பஞ்ச் பகுதி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றது. அதன் பின்னர் அவரது சடலத்திற்கு தீயூட்டப்பட்டது. அந்த சமயம் தூரத்து உறவினர்களான 45 வயது மதிக்கத்தக்க சுந்தர் மோகன் சிங் மற்றும் 25 வயதான நரேந்திர சிங் ஆகியோர் உறவினர்கள் எல்லாம் சென்ற பிறகு எரிந்து கொண்டு இருந்த சடலத்தின் பாகங்களை எடுத்து தின்றுள்ளனர்.


இதனை பார்த்த ஒரு சில உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும், பிணத்தை தின்ற  சுந்தர் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், திருமணம் ஆகாத பெண்ணின் சடலத்தை சாப்பிட்டால் சக்தி வரும் என கூறி சாப்பிட்டதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளனர். இவர்களிடம் , காவல்துறையினர், இது போல மேலும் ஏதேனும் பிணத்தை சாப்பிட்டுள்ளனரா.? என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here