காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இன்று பெங்களூரு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வரும் 2023 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருகின்றன. இதற்கான முதல் கூட்டம் பிகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. அதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதன் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று மற்றும் நாளை நடைபெறும் என ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. இந்த கூட்டமானது காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூனன் கார்கே தலைமையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 24 எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்திலிருந்து திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இன்று இந்த கூட்டம் நடைபெற உள்ளதால், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பெங்களூரு புறப்படுகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பெங்களூரு வரவுள்ளார்.
No comments