மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழா இலவச பன்னோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, மாக்கினாங்கோம்பை ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச பன்னோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்குஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டி. பிரபாவதி , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ். முருகேசன் மற்றும் மருத்துவர்கள், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் செவிலியர்கள், மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன் , இண்டியம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். செந்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விசுவநாதன் , ஒன்றிய துணைச் செயலாளர் டி பி. அசோகன், மாணவர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார், மற்றும் வார்டு உறுப்பினர்கள். மற்றும் மருத்துவப் பணியாளர்கள். அங்கன்வாடி பணியாளர்கள். துப்புரவு பணியாளர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக முகாமில் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments