கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் விரிவாக்க பணிக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நிகழ்வுக்கு எதிராக அப்பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அவரை கைது செய்த காவல்துறையை கண்டித்து தமிழக முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் .
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் புகலூர் துறை தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா முன்பு தமிழக அரசுக்கும் என்எல்சி நிர்வாகத்திற்கும் எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நிகழ்வில் மாநகர மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் வன்னியர் சங்கச் செயலாளர் பசுபதி மாவட்டத் துணைச் செயலாளர் வாங்கல் சதீஷ் வரதன் ஒன்றிய செயலாளர்கள் கார்முகிலன் சுபாஷ் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மோகன் ராஜ்
No comments:
Post a Comment