நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வடுகச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை வணக்கம் தமிழகம் நாளிதழ் மற்றும் அனைத்து தலைமை பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் எ.பீ.ஜே.அப்துல்கலாம் 8 ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் அப்துல்கலாம் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி நடைப்பெற்ற ஓவியப் போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஷ்வரி இளையராஜா, அறக்கட்டளை மாவட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி, பொருளாளர் அன்புராஜ், ஊராட்சி மன்றத் துணை தலைவர் உமா கார்த்திகேயன், பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் பாப்பையன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஷாலினி, பத்திரிகையாளர்கள் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ், இரத்தின விகாஷ், சமூக ஆர்வலர்கள் விஜயகுமார், பழனிவேல், ஜாகிர் உசேன், சுதாகர், ஜோதிபாசு, ஜெயராஜ், வெங்கடேசன், தமிழ்மணி, ஜீவாராமன் ஆசிரியர்கள் சிவக்குமார், அப்போலினிமேரி, கலா, வேதவள்ளி, கீதா மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் க. சக்கரவர்த்தி
97 88 34 18 34
No comments:
Post a Comment