மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலை குத்தாலம் கடைவீதியில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் பொதுமக்களின் விலை நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்துமாறு நிர்வாகத்திற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனை தொடர்ந்து காவல்துறையினரால் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அன்புமணி ராமதாஸின் கைது நடவடிக்கையை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன் தலைமையில் பாமகவினர் என்எல்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் குத்தாலம் பேரூர் செயலாளர் வக்கீல் சுரேஷ், மாவட்டத் தலைவர் சந்தானம்,மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் விக்னேஷ்,மதன்ராஜ், பசுமைத்தாயக நிர்வாகி மகேந்திரன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி ராமன் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
No comments:
Post a Comment