மயிலாடுதுறையில் புதிய நவீன கண் பரிசோதனை கூடத்தை தருமபுரம் ஆதீனம் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் திறந்து வைத்தனர்
மயிலாடுதுறை மயூரநாதர் சன்னதி தெருவில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமார கட்டளை மடத்தில் புதிய அதிநவீன கண் பரிசோதனை கூடமானது இன்று திறக்கப்பட்டது.ரோட்டரி சங்கங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண் பரிசோதனைக் கூடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். மேலும் அங்கிருந்த அதிநவீன கண் பரிசோதனை உபகரணங்களை பார்வையிட்டு இருவரும் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.தொடர்ந்து சிறப்புரையாற்றிய தருமபுரம் ஆதீனம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் கண் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்கி கண்ணாடிகளை வழங்கினர் .இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments