• Breaking News

    மதுரை ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு.......

     


    உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்துள்ளார்.

    இந்த நிலையில், இந்த ரயில் பெட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த தீ அனைத்து பெட்டிகளுக்கு மளமளவென பரவிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ரயிலில் பயணித்த பயணிகள் சிலிண்டரை எடுத்து சென்ற நிலையில்,  ஏற்பட்ட தீ  விபத்தில், இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

    தீ விபத்தில் சிக்கி முதலில் இருவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 8 பேரின் சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீர்ரகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலர் இந்த தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

     காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில்  உயிரிழந்தவர்கள் உத்திரபிரதேசத்தை   சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    No comments