குவைத்தில் தேமுதிக குவைத் பிரிவு சார்பாக கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, August 27, 2023

குவைத்தில் தேமுதிக குவைத் பிரிவு சார்பாக கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடைபெற்றது


உலகம் முழுவதும் ஆகஸ்ட் 25 தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை வருமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கொண்டாடிவருகிறார்கள்.

தேமுதிக குவைத் பிரிவு செயலாளர் மாலிக் அன்சாரி அவர்களுடைய ஆலோசனைப்படி, தேமுதிக குவைத் பிரிவு அவைத்தலைவர் சின்னா அவர்களின் ஒருங்கிணைப்பின் படி,அரபு நாடான குவைத்தில், தேமுதிக குவைத் பிரிவு சார்பாக "குவைத் பிரிவு" துணைசெயலாளர் ஏ.டி.முருகன் தலைமையில், துணைசெயலாளர் ராஜ்மணி முன்னிலையில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா "இரத்ததானம் செய்து இனிப்புகள் வழங்கி வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் டி.முத்துபாண்டி,எஸ்.செந்தில், ஆர்.கருணாகரன்,எம்.சபியுல்லா,ஏ.நவ்வர்உசேன்,ஏ.முகம்துதாரீக், பி.நூரூல் அமீன், எம்.கணேஷ்,ஜி.சரவணன், கே.ராஜேஸ்,டி.தியாகராஜன்,ஏ.சுலைமான்,எம்.முகம்மதுஇலியாஷ்,ஜி.அமீர்கான்,எம்.ஜாகீர்,ஏ.ஆரீப்யுல்லா,சி.ஜெய்சங்கர்,எஸ்.ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டஅனைவருக்கும் குவைத் பிரிவு துணைச் செயலாளர் முருகன் நன்றி உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 9965162471 .

No comments:

Post a Comment