வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு..... - MAKKAL NERAM

Breaking

Sunday, August 27, 2023

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு.....

 


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோவில் உள்ளது.இந்த கோவில் அருகே உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது. அதனை தோண்டி பார்த்த போது அடுத்தடுத்து சிலையாக 5-க்கும் மேற்பட்ட சிலைகள் கிடைத்தது. இத்தகவல் காட்டு தீ போல் பரவியது.

சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சோழன், வருவாய் தாசில்தார் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு குமராட்சி இன்ஸ்பெக்டர் அமுதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சாமி சிலைகளை பார்வையிட்டனர். அங்கு மேலும் சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தோண்டி வருகிறார்கள்.

இது குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மண் தோண்டும் போது கிடைத்த சிலைகள் சுமார் 200 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும் அவைகள் அனைத்தும் ஐம்பொன் சிலை எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவ இடத்தை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்விழி மற்றும் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொள்ளாப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிலைகள் கூட இருக்கலாம் எனதெரிவித்தனர். மேலும் கிராமத்தில் தொடர்ந்து ஆய்வு பணிகள் நடத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment