மயிலாடுதுறை அருகே ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, August 27, 2023

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது


மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் கிராமம் மேலையூர் ஊராட்சி ஏரிமேட்டுத்தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது முன்னதாக கோயிலில்யிருந்து சக்தி கரகம்,பக்தர்கள் பால்குடங்களுடன் தலையில் சுமந்தவாறு, அழகு காவடி,வான வேடிக்கை,மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு வழிபட்டனர்.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை ஊர் கிராமவாசிகள் நாட்டாமைகள் முக்கியஸ்தர்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment