கூகலூர் பேரூராட்சியில் குழந்தைகள் மையம் கட்டிடத்தை அந்தியூர் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியம், கூகலூர் பேரூராட்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 11.87 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குழந்தைகள் மையக் கட்டிடத்தை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோபி திமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரவீந்திரன் , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் காயத்ரி , கூகலூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி,கூகலூர் பேரூர் கழக செயலாளர் ராஜாராம்,ஒன்றிய துணைச் செயலாளர் ரேணுகாதேவி , ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பிரவின் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூர் வார்டு கழக செயலாளர்கள் , திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments