ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம் - தீர்ப்பை வரவேற்று கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி பேசிய அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அவரது தண்டனையை நிறுத்தி வைத்ததை அடுத்து காங்கிரஸ்சார் உற்சாக மடைந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் இதனை வரவேற்று வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தி எனவும் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் எனவும் கோஷங்கள் எழுப்பினர் இதனையடுத்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு வழங்கியும் கொண்டாடினர்..
இந்நிகழ்வில் மனித உரிமை பிரிவு மாநில செயலாளர் c காளிதாஸ் INTUC ராஜா சேகரன PCC உறுப்பினர் திருப்பதி ராஜா,sc /st பிரிவு மாவட்ட தலைவர் கண்ணாயிரம் முத்து, மாவட்ட செயலாளர் ஜோஷ்வா,சுடலை மணி, பழனி சாமி, மகேந்திரன், ஆல்வின், ஆறுமுகம், கோபால், சுந்தர் ராஜ், சுமன், அய்யாதுரை, சூர்யமுர்த்தி, ரமேஷ், வேல்சாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments